பாலஸ்தீன கொடியை ஏந்திய ஸ்பெயின் வீரர்கள்: ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் வந்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி டிரம்ப் மற்றும் FIFA தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோர், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் பதக்கங்களை வழங்கி, உலகக்கோப்பையை ஒப்படைக்கும் வரை இந்த கூச்சல் நீடித்தது.

பின்னர் ஸ்பெயின் அணித் தலைவர் ரோட்ரி (Rodri) கோப்பையை உயர்த்தும் தருணத்தில், டிரம்ப் மேடையின் பக்கவாட்டிற்கு அழைக்கப்பட்டார்.

சர்ச்சை பின்னணி

இந்த உலகக்கோப்பைத் தொடரின் மிகப்பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக டிரம்ப் இருந்தார். லீக் சுற்றில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான போட்டியில், அமெரிக்க முன்னணி வீரர் ஃபோலரின் பாலோகனுக்கு (Folarin Balogun) ‘ரெட் கார்டு’ (Red Card) கொடுக்கப்பட்டது.

இதையடுத்த டிரம்ப், FIFA தலைவர் இன்ஃபான்டினோவை நேரடியாகத் தொடர்புகொண்டு அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன் காரணமாக பாலோகனின் ஒரு போட்டித் தடை நிறுத்தி வைக்கப்பட்டு, பெல்ஜியத்திற்கு எதிரான 16-வது சுற்றுப் போட்டியில் அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஸ்பெயின் வீரர்கள் பாலஸ்தீன கொடியையும் ஏந்தி இருந்தனர்.

 

Related Articles

Latest Articles