X-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவா?

X-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுவதாக Sky இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

தீப்பற்றிய கப்பல் மூழ்கியுள்ள கடல் பிராந்தியத்தில் பாரியளவில் எண்ணெய்ப் படலம் காணப்படுகின்றனமை குறித்த செய்மதி படங்களினூடாக தெரியவந்துள்ளது.

இதனைத் தவிர, கப்பல் மற்றும் கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களையும் சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய கடல் சார் பாதிப்பு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவாவிடம் நாம் வினவினோம்.

எனினும், அவ்வாறான எண்ணெய்ப் படலம் இல்லை என கண்காணிப்புகளூடாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மூழ்கும் கப்பலை அண்மித்து 05 கப்பல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா குறிப்பிட்டார்.

தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி நியுஸ்பெஸ்ட்

Related Articles

Latest Articles