தெய்வீக தலைவரை கோழைத்தனமாக கொன்றுவிட்டீர்கள்: பழி தீர்ப்போம் – ஈரான் ராணுவ தளபதி சபதம்

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது வகிதி சூளுரைத்துள்ளார்.

அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் பல்வேறு முக்கிய நகரங்கள் வழியாகச் சென்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் நேற்று (ஜூலை 9) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே ஈரானின் படைத்தளபதி மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.

“ஈரான் உச்சத் தலைவர் கோழைத்தனமான முறையில் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும். அதற்கேற்ப அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.” எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

உச்சத் தலைவரின் படுகொலை வரலாற்றின் நினைவில் இருந்து ஒருபோதும் அழியாது. அமெரிக்காவின் குற்றம் இழைக்கும் தலைவர்களும், ஈரான் ராணுவத்தின் அனைத்து எதிரிகளும் ஒன்றை அறிய வேண்டும். இந்த தெய்வீக தலைவரை கோழைத்தனமாகக் கொன்றதன் மூலம், எதிர்ப்பை ஒருபோதும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது.

பழிவாங்குவதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும், உறுதியான, நியாயமான, மறக்க முடியாத கோரிக்கையாகத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles