அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், தெலங்கானாவை சேர்ந்த துவ்வுர் நாகேஷ்வர ரெட்டி (மருத்துவம்), சண்டிகர் நீதிபதி (ஓய்வு) ஜெகதிஷ் சிங் கேஹர், குஜராத்தின் குமுதினி ரஜினிகாந்த் லகியா, கர்நாடகாவின் லட்சுமிநாராயண சுப்ரமணியம், கேரளாவின் எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவு), சுசுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மறைந்த ஓசாமு சுசுகி, பிஹாரின் ஷார்தா சின்ஹா (மறைவு) ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோல, தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் 23 பெண்கள், 10 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் பி.தட்சிணாமூர்த்தி, அமெரிக்க மென்பொறியாளர் சேதுராமன் பஞ்சநாதன், ஹரியானாவை சேர்ந்த பாரா வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் (33), கோவாவில் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த லிபியா லோபோ சர்தேசாய் (100), டெல்லியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நீரஜா பாட்டியா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தக் இசைக் கலைஞர் கோகுல் சந்திரதாஸ் (57), நாகாலாந்தை சேர்ந்த பழ விவசாயி எல்.ஹாங்திங் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல பிரேசிலை சேர்ந்த இந்து ஆன்மிக தலைவர் ஜோனஸ் மசெட்டி, குவைத்தை சேர்ந்த ஷீகா ஷேகா அலி அல் ஜபர் அல்-சபாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். உத்தரா கண்டை சேர்ந்தவர்களும் இந்தியாவின் பாரம்பரியம் பற்றி எழுதி புகழ்பெற்றவர்களுமான மறைந்த ஹக் மற்றும் கொலீன் கான்ட்சர் தம்பதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குவார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles