பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கத்தால் கூறப்பட்டது. தற்போது 2021 ஜனவரி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலாளிமார் சம்மேளனம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுவருகின்றது.
எனவே, கடந்த காலங்களைபோல் ஏமாற்றாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த கொடுப்பனவு நிச்சயம் வழங்கப்படவேண்டும். அதுவும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். ” – என்றும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.