கண்டி கலஹா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்கின்றனர்.
இப்பிரதேசத்தில் 4 தொகுதி லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியின் இருபுறங்களிலுமாக 45 குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் இவ்வீடுகளில் வசிப்பதே கடினமாகும். சேதமடைந்த தகரக் கூரைகளின் வழியாக வடியும் நீரினால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத அவல நிலை காணப்படுகின்றது.
இக்குடும்பங்கள் தனது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமப்படுகின்றனர். இரண்டு வீடுகளுக்கு ஒரு கழிப்பறை என்றவாறே பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் இம்மக்கள் உள்ளனர். தற்போது கொவிட் 19 அச்சுறுத்தல் நிலவுவதால் மக்கள் சுகாதார பாதுகாப்பை பேணுவது என்பது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது.

இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி தங்களுக்கான உரிய உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே தோட்டமக்களின் கோரிக்கையாகும்.
(ர.ரெஜீனா)
