இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டபின் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி, டி20 சாம்பியன் என இந்திய அணி சாதித்துக் காட்டியது. கேப்டனாக மட்டுமின்றி, தனது பேட்டிங்கிலும் ரோகித் சர்மா அணிக்கு ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார்.
ஆனால், டி20 சாம்பியனாக இந்திய அணி மாறியுவுடன் ரோகித் சர்மா தனது டி20 ஓய்வை அறிவித்தார். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் புதிய கேப்டனை நியமித்து அவரை அணியை வழிநடத்த பழக்க வேண்டும். அந்த வகையில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் கேப்டன் பதவிக்கு 4 வீரர்கள் பெயர்கள் பரிசீலனையில்இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா
ரோஹித் சர்மா அணியில் கேப்டனாகஇருந்தபோதே, துணைக் கேப்டனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஆதலால், தானாகவே கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.இருப்பினும், ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படக்கூடியவர், கேப்டனாக இருக்கும் வீரர் நல்ல உடற்தகுதியுடன் காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஹர்திக் பாண்டியா பெயர் பரீசீலிக்கப்பட்டாலும் அவரின் உடற்தகுதி அவருக்கு தடையாக மாறலாம். ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி ஹர்திக் கோப்பையை வென்று கொடுத்து, மும்பை அணிக்கும் புதிய கேப்டனாக வந்துள்ளார். அந்த அனுபவம் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவும் இருப்பதால் அவர் கேப்டனாக நியமிக்ககப்பட்டால் வியப்பில்லை.