” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமயகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கட்சியில் உள்ள சிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டுவந்தாலும் கட்சி என்ற வகையில் இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. உரிய காலத்தில், உரிய வகையில் கட்சி என்ற அடிப்படையில் அதற்கான தீர்மானம் எடுக்கப்படும். தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது பற்றியும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்ல.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்சவே பிரதமர் ஆக்கினார். அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு எமது கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவை வெளிப்படுத்தியது. எனவே, எமது கட்சியுடன் பேச்சு நடத்திய தீர்மானங்களை எடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
