அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் களமிறங்குவேன் – ஆளுநர் நவீன் அறிவிப்பு!

” ஆளுநராக பதவியேற்றிருந்தாலும் அடுத்த பொதுத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த மாவட்டத்தில் களமிறங்குவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.” – என்று சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.

” எனது தந்தை காமினி திஸாநாயக்கதான் இலங்கையில் மாகாணசபைகளை ஏற்படுத்தினார். அந்த வகையில் ஆளுநர் பதவியேற்றிருப்பது மகிழ்ச்சி. ஆளுநர் பதவியென்பதும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிக்கு ஒப்பானது.

மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் ஆளுநருக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த சவாலை எதிர்கொள்வேன். அனைத்து கட்சிகளையும் இணைத்துகொண்டு சப்ரகமுவ மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பேன்.

மத்திய மாகாணம்தான் என் இதயம். சப்ரகமுவ மாகாணமும் மலையகத்தின் ஓர் அங்கம்தான். அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.”எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles