” நாட்டில் அடுத்த ஜனாதிபதியை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே உருவாக்கும் என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் மிகிந்தலை தொகுதி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அடுத்து எந்த தேர்தல் நடந்தாலும் பரவாயில்லை. அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நாம் தயார் என்று எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெளிவாக அறிவித்துவிட்டார். அடுத்த ஜனாதிபதியை எமது கட்சிதான் உருவாக்கும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எமது கட்சிதான் தீர்மானிக்கும்.” எனவும் சாகர குறிப்பிட்டார்.










