அடுத்த வாரம் புதிய கட்சி உதயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

கண்டி ஓக் ரே ரீஜென்சி ஹோட்டலில் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள்அமைப்பின் விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ள பொதுஜன பெரமுன அணி அடுத்த வாரத்திற்குள் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles