அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய அவசரக் கூட்டத்துக்கு பஸில் அழைப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயரமட்ட கூட்டமொன்றுக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.

உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளாட்சிமனங்களின் பிரதானிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்த பின்னர் அமெரிக்கா பறந்த பஸில் ராஜபக்ச, நேற்று முன்தினம் நாடு திரும்பினார்.

முதற்கட்டமாக மொட்டு கட்சி எம்.பிக்களுடன் பாதீடு குறித்து பேச்சு நடத்துவார். அதன்பின்னர் ஏனைய சந்திப்புகள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வரவு- செலவுத் திட்டத்துக்கு பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு 10 அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles