அடுத்து என்ன? 22 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்!

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நாடு திரும்பிய கையோடு கட்சி முக்கியஸ்தர்களுடன் பஸில் சந்திப்பு நடத்தவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்துவிட்டதால், நேரடி அரசியல் செயற்பாட்டில் பஸில் ராஜபக்ச பங்கேற்கமாட்டார் எனவும் அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles