அடுத்து என்ன? இன்று அறிவிப்பை விடுப்பார் மஹிந்த

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனத்தின்போது கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவாரா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கட்சி தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார். அது என்ன அறிவிப்பு என இப்போது கூறமுடியாது.” ” – எனவும் ரோஹித எம்.பி. குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles