அடுத்து என்ன? சட்டஆலேசனை பெறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

” 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டஆலோசனை பெறப்பட்டுவருகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 20 இற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவைப்பெற்று ஜனநாயகத்துக்கு சமாதிகட்டியுள்ளனர்.

பெண் பிரதிநிதி என்ற அடிப்படையிலேயே டயானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் ஒட்டுமொத்த பெண்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்.” – என்றார்.

அதேவேளை, அரவிந்தகுமாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி ஆராய்ந்துவருகின்றது.

Related Articles

Latest Articles