அடை மழை தொடரும் – ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – 18 பேர் பலி!

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 52 ஆயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7  ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஆயிரத்து 39 வீடுகள் பகுதியளவும், 20 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 360 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 164 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை இன்றும் நாளையும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 100 மி.மீ. வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles