அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்துள்ளார்.
