அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு

பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது.

மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும்.

ஒயிட் டார்ஃப் (white dwarf) எனப்படும் இந்த நட்சத்திரம், வேறொரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருந்தது என்றும், அது எதிர் திசையில் பறக்கும் நிலையில் வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விண்வெளியாளர்கள் கருதுகின்றனர்.

இதுபோல இரண்டு நட்சத்திரங்கள் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, அவை “பைனரி” எனப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே விண்வெளியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

SDSS J1240+6710 எனப்படும் இந்த விண்பொருள், முன்பு அசாதாரணமாக வான்வெளி சேர்க்கையைக் கொண்டதாகக் கருதப்பட்டது.

இது 2015ல் கண்டறியப்பட்டது. வழக்கமாகக் காணப்படும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் ஆகியவை இதில் இல்லை. மாறாக, ஆக்சிஜன், நியான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் என வழக்கத்திற்கு மாறான கலவையைக் கொண்டதாக இருக்கிறது.

இப்போது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி சர்வதேச குழுவினர் ஆய்வு செய்ததில், கார்பன், சோடியம், அலுமினியம் ஆகியவை அந்த நட்சத்திரத்தின் வான் மண்டலத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சூப்பர்நோவா நிகழ்வில் முதலாவது வெப்ப ஆற்றல் வெளிப்பாட்டில் இவை உருவாகும்.

ஆனால் இரும்பு, நிக்கல், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற “இரும்பு வகை” தனிமங்களை அதில் காண முடியவில்லை.

கனமான தன்மை கொண்ட இந்தத் தனிமங்கள், லேசானவற்றில் இருந்து உருவாகக் கூடியவை. சூப்பர்நோவா வெப்ப ஆற்றலின் அம்சங்களைக் காட்டுபவையாக இவை இருக்கும்.

SDSSJ1240+6710 -ல் இரும்பு வகை தனிமங்கள் இல்லாதிருப்பதால், அணு ஆற்றல் எரிப்பு முடிவதற்கு முன்னதாகவே இந்த நட்சத்திரத்தில் பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

`ஒயிட் டார்ஃப் என்பதன் அனைத்து முக்கிய அம்சங்களும் இருப்பதால், இந்த நட்சத்திரம் தனித்துவமானது. இது மிக அதிகமான வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. குறைந்த நிறை கொண்ட பொருள்களுடன் இணையும்போது வழக்கத்திற்கு மாறான பொருள்கள் அபரிமிதமாக உருவாதல் அதை அர்த்தமற்றதாக ஆக்குகிறது” என்று பிரிட்டனில் வார்விக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ள போரிஸ் கன்சிக்கே கூறியுள்ளார்.

“அணு ஆற்றல் எரிப்பின் தடயங்களைக் காட்டும் ரசாயனக் கலவை அதில் உள்ளது. குறைந்த நிறை கொண்டதாக, அதிக அளவில் வேகத்தை அதிகரிப்பதாக உள்ளது; அதைப் போன்றே உள்ள வேறொரு நட்சத்திரத்தில் இருந்து இது வெளியேறி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது. இது ஒரு வகையான சூப்பர்நோவா ஆக இருந்திருக்கலாம், ஆனால் நாம் முன்பு பார்த்திராத வகையாக இது இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்குப் பிறகு தங்களின் சுற்றுப் பாதையில் எதிர்த் திசைகளில் ஈர்ப்புப் பிடிமானத்துடன் இருப்பதால் அதிக அளவிலான வேகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த நட்சத்திரத்தின் நிறையை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். சூரியனின் நிறையில் 40 சதவீதம் அளவுக்கு ஒயிட் ட்வார்ப் நிறை இருக்கும். நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிடாத பகுதியளவு சூப்பர்நோவா பாதிப்பால் ஏற்படுவதாக இது இருக்கும்.

அணுசக்தி நிலையங்கள் அல்லது பெரும்பாலான அணு ஆயுதங்களில் இருந்து வெளியாகும் சக்தியில் இருந்து மாறுபட்டதாக சூப்பர்நோவா பாதிப்பில் இருந்து வெளியாகும் அணு ஆற்றல் எரிப்பின் தன்மைகள் இருக்கும். பூமியில் அணு சக்தியின் பெரும்பாலான பயன்கள் அணு பிளவு மூலம் பெறப்படுகின்றன. கனமான தனிமங்களை லேசானவையாக உடைப்பதாக அது உள்ளது. நட்சத்திரங்களில் நிகழும் அணு சேர்க்கை போல இருக்காது.

“பூமியில் நமது எதிர்கால அணுசக்தி நிலையங்களில் பெறுவதற்கு முயற்சிக்கும் வெப்ப ஆற்றலைப் போன்றதாக, சூப்பர்நோவா வெப்ப ஆற்றல் வெளிப்பாடு தன்மை இருக்கும். லேசான தனிமங்களை அணு சேர்க்கை மூலம் கனமானதாக ஆக்கி, அதில் அபரிமிதமான ஆற்றலைப் பெறுவது என்பது நமது முயற்சியாக உள்ளது” என்று பேராசிரியர் கன்சிக்கே பிபிசியிடம் கூறினார்.

“அணுசேர்க்கை உலையில், மிகவும் லேசான ஹைட்ரஜன் தனிமத்தை (மிகவும் குறிப்பாக, மாறுபட்ட மணங்கள் அல்லது அதன் ஐசோடோப்புகள்) பயன்படுத்துவோம். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவில், நட்சத்திரத்தின் தின்மை மற்றும் அதில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கனமான தனிமங்களின் சேர்க்கை ஆரம்பமாகும். கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை இதன் `எரிபொருளாக’ இருக்கும். கனமான மற்றும் இன்னும் கனமான தனிமங்களின் சேர்க்கை நிகழும்” என்றார் அவர்.

டைப் லா என்பது தான் மிக சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட வெப்ப ஆற்றல் வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவாக உள்ளது. இருள் எரிசக்தியைக் கண்டுபிடிக்க இது உதவிகரமாக இருந்தது. இப்போது பிரபஞ்சத்தின் அமைப்பை பொருத்திப் பார்ப்பதில் இந்த நடைமுறை வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாக்கள் நிகழலாம் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

இதுவரையில் அறியப்படாத வகையிலான சூப்பர்நோவா வெடிப்புக்கு ஆளானதாக SDSSJ1240+6710 இருக்கும் என்று கருதப்படுகிறது.

டைப் லா சூப்பர்நோவாக்களின் நீண்ட காலம் நீடித்திருக்கும் மிளிர்ச்சியை அளிக்கும் கதிரியக்கத் தன்மை கொண்ட நிக்கல் இல்லாமல், நமது அண்டத்திற்குள் ஒயிட் ட்வார்ப்-ஐ அனுப்பிய வெடிப்பு என்பது கண்டுபிடிக்க சிரமமானதாக இருக்கும், குறுகிய நேர ஒளிக் கீற்றில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை Royal Astronomical Society மாதாந்திர தகவல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பிபிசி அறிவியல் பிரிவு

Related Articles

Latest Articles