அண்ணாத்த திரைப்படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் ரஜினி – நயன்தாரா டூயட் பாடியுள்ள சாரா காற்றே என்ற இரண்டாவது சிங்கள் வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியின் சகோதரிகளாக மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கா பேமிலி ட்ராமாவாக உருவாகும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles