இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அதானி தனிப்பட்ட விஜயமாகவே, இலங்கை வந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன இன்று தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.