நிரணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டால்இனி ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நிர்ணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாவே அபராதம் விதிக்கப்படுகின்றது. இப்பணத்தை செலுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் இலகுவில் தப்பிவிடுகின்றனர். எனவேதான் 2,500 ரூபாவை ஒரு லட்சமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
