நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசிவிற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
![]()
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1 கிலோகிராம் நாட்டு அரிசியின் விலை ரூபா 220/-, சம்பா அரிசி 1 கிலோகிராம் 230/- மற்றும் கீரி சம்பா அரிசி 1 கிலோகிராம் 260/- ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
