ஹட்டன் வெளிஒயா மலைமகள் வித்தியாலய அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படும்வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பபோவதில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மலைமகள் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவரொருவரை கடுமையாக தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபரின் முறைகேடான நிர்வாகத்துக்கு எதிராகவும் அண்மையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி கோரி பெற்றோர் போராடுகையில் அவ்விடத்துக்கு பொலிஸார் வந்தனர். இதனையடுத்து எழுத்துமூலம் முறைப்பாட்டை பதிவுசெய்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். எனினும், இன்றுவரை குறித்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே பெற்றோர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர். இன்று இரண்டு மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சென்றுள்ளனர். அதிபரைதவிர ஏனைய ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ். சிறிதரனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிவில்லை.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்