அத்தியாவசிய பொருட்களை அநாவசியமாக சேமிக்க வேண்டாம் – நளின்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அவசியமின்றி உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles