அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அ.டொ. வழங்கியது மத்திய வங்கி

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப்பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles