அநுரவுக்கு நிமல் லான்சா விடுத்துள்ள சவால்

நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் தன்னுடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா சவால் விடுத்துள்ளார்.

ஏதேனும் காரணத்தைக்கூறி நழுவாமல் தனது சவாலை அநுர ஏற்க வேண்டும் எனவும் லான்சா கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

Related Articles

Latest Articles