அநுரவுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் – பிரதமர் மோடி

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் கொள்கைகளில் இலங்கை விசேட இடத்தினைக் கொண்டுள்ளது.

நமது மக்களினதும் இப்பிராந்தியம் முழுவதினதும் நலன்களுக்காக நம்மிடையேயான பன்முக ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவதற்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.’’ – எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles