இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும்.
மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.
சீரற்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக அறிவிப்புச் செய்யும் விதமான பயனுள்ள முன்னெடுப்புகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
நமது நாட்டிற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப டாப்ளர் ரேடார் கருவிகள் இன்னும் இல்லை.
சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இடர் முகாமைத்துவ பொறிமுறையானது தோல்வி கண்டுள்ளது.
இரண்டு வார முன்னறிவிப்புகளுக்குப் பிறகும் சரியாக உரிய நடவடிக்கைகளை வகுத்துச் செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.










