அனுசா சந்திரசேகரனுக்கு இராதாகிருஷ்ணன் மீண்டும் அழைப்பு!

பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உயர் பீட கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் எனது தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன். மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார கொரோனா நிலைமை தொடர்பாகவும் அரசியல் நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் முடக்க நிலை விடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் எங்களுடைய இளைஞர் யுவதிகள் மீண்டும் எவ்வாறு தங்களுடைய வேலைத் தளங்களுக்கு செல்வது அதன்போது அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட கம்பனிகளால் தொடர்ந்தும் பழிவாங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இதற்கு எவ்வாறு தீர்வை பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே மலையக மக்கள் முன்னணியில் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் வெளியில் சென்றவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து செயற்பட முடியும் என்பதை அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானித்ததுடன் அவ்வாறான ஒரு நிலையில் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கட்சியின் கொள்கையுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றவர்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles