” நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரீகத்தை முறையாக பின்பற்றவும்.”
இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கினார்.
” கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும்போது, ஏனைய எம்.பிக்களை தனிப்பட்ட ரீதியில் தாக்கி பேசுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதனை சரிவர செய்துள்ளேன்.”- என்றார்.
