“ சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொதுவேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேர்தலுக்கு நேர்மையாக முகங்கொடுக்க அஞ்சி, மக்களை ஏமாற்றி வாக்குவேட்டை நடத்துவதற்காக சிலர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிவருகின்றனர். செய்ய முடியாத விடயங்களைக்கூட உறுதிமொழியாக வழங்கிவருகின்றனர்.
இதனால் அரசியல் கட்சிகள்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. எனினும், ஐக்கிய தேசியக்கட்சி செய்யக்கூடிய விடயங்களையே கூறிவருகின்றது. கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறுவது மேலானதாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மட்டும் அல்ல அனைத்து கட்சிகளுடனும் எமக்கு தொடர்பு உள்ளது. அனைவரையும் இணைத்துக்கொண்டு கட்சிசாராத வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார்.” – என்றார்.










