சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறுகோரி அட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










