அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அன்னம் சின்னத்திலேயே களமிறங்குவார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்பட்டுவருவதாகவும், நிமல் லான்சா தரப்பு, மொட்டு கட்சியின் சுயாதீன தரப்பு உட்பட பலரும் ரணிலை ஆதரிக்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி மெகா கூட்டணியை மக்கள் முன்னணிலையில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது.
அதேபோல ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.










