அப்புத்தளை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

அப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் பா.கந்தசாமி கண்ணாவால் இன்று (30.09.2021) 2022 ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் 19 மேலதிக வாக்குகளால் அப்புத்தளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கான கூட்டம் சபையின் தவிசாளர் பா.கந்தசாமி கண்ணா தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரால் முன்மொழியப்பட்ட வரவுசெலவுத் திட்ட பிரேணைக்கு ஆதரவாக சபையில் அங்கம் வகிக்கும் 20 உறுப்பினர்களில் 19 பேர் வாக்களித்தனர்.

இவர்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 6 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 7 உறுப்பினர்களும் அடங்குவர். ஒரு உறுப்பினர் மட்டும் பிரேணைக்கு எதிராக வாக்களித்தார்.

2022ஆம் ஆண்டிற்கான உத்தேச வருமானமாக ரூபா.64,039,174.09 எதிர்பார்க்கப்படுவதுடன் வருடத்திற்கான உத்தேச செலவீனமாக ரூபா. 64,037,192.50 கணக்கிடப்பட்டுள்ளது.

அப்புத்தளை பிரதேச சபையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு தமிழ் தவிசாளராக பா.கந்தசாமி கண்ணா கடந்த 2018 ஆம் ஆண்டு மாரச் மாதம் 27 ஆம் திகதி பதவியேற்றார். இவர் தொடர்ந்து முன்மொழிந்த நான்கு வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகளும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles