அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

அவதானமிக்க, ஆளுமைபண்புமிக்க, ஆற்றல்மிக்க, தலைவணங்கா தானைத்தலைவனாக, கொள்கை பற்று, அஞ்சா நெஞ்சம் கொண்ட, அநீதியை தட்டிக் கேட்பதில், தொலைநோக்கு கொண்ட விலைபோகா தலைவர், முடிவெடுப்பதில் எல்லோருக்கும் அவர் முன்மாதிரி ஆகிய பண்புகளை கொண்ட பெருந்தகை ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இரண்டாவது நினைவேந்தல் இன்றாகும்.

அரசோடு இணைந்து மலையக சமூகம் ஏனைய சமூகங்களைப் போல சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இலட்சிய நோக்குடனேயே செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதித்த வெற்றி நிகழ்வுகள் ஏராளம். பார்ப்போமேயானால் அமரர் ஆறுமுகன் தொண்டமான் 90களில் இ.தொ.காவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 93இல் இ.தொ.காவின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகவும் 94இல் பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். இதே ஆண்டிலேயே முதற் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கி 74,000 வாக்குகளைப் பெற்றவர். 2000, 2004, 2010 ஆண்டுகளில் நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றது மாத்திரமின்றி மலையகத் தமிழ் பிரதிநிதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபடியான வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு உண்டு.

அமரர் சௌமிமூர்த்தி தொண்டமானின் மறைவிற்கு பின்னர் 2000ம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற அவர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் முதலாளிமார் சம்மேளத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 20மூ வீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுத்தார். அதே ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு முதன் முதலாக போட்டியிட்டாலும் கூட தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்று அவ்வரசியலிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக அமரர் விளங்கினார் என்பதில் வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

பாராளுமன்றத்தில் 17வது யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது முதல் முறையாக இந்திய வம்சாவளி மக்கள் தனி தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை நிலைநாட்டினார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கொள்கைப்படி ஆளும் கட்சிகளில் பங்காளியாவதன் மூலமே மலையகத்தின் அபிவிருத்திக்கு உறுதுணை புரிய முடியும் என்பதற்கேற்ப அமரர் ஆறுமுகன் ஆளும் கட்சி எதுவென்றாலும் அதில் அங்கத்துவம் பெற்றாலும் மலையக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஆளும் கட்சியை எதிர்க்கவும் அவர் ஒருபோதும் தவறியதில்லை.

1996ஆம் ஆண்டு சம்பள ஒப்பந்தத்தின் போது தொழிலாளர் கோரிக்கைக்கு செவிசாய்க்கத் தவறிய தொழில் அமைச்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்து அரசை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு தனது செயற்பாடுகள் அமைந்திருந்தன. 2003ஆம் ஆண்டு மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிரஜாவுரிமை விடயத்தை இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கை பிரஜைகளாக அங்கிகரிக்கும் விசேட சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தார்.

1999இல் கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் 2001ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல் அமைச்சராகவும் பதவி வகித்து மலையக மக்களினதும் ஏனைய பகுதி மக்களினதும் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்திருக்கின்றார். 2010ஆம் ஆண்டு கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றார். இதனோடு இலங்கை இந்திய சமுதாயப் பேரவையிலும் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார். 3179 மலையக ஆசிரியர் நியமனங்கள் 500 தபால் சேவை ஊழியர் நியமனங்கள் என்பன அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அணுகுமுறையால் மலையக மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதங்கள் எனலாம். 2015ஆம் ஆண்டு தோட்டத்தொழிலாளர்களின் 100ரூபா நாட் சம்பள உயர்வை ஆரம்பித்தவர் அமரர்தான். இதேவேளை மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அடித்தளம் கோரியவரும் அமரர் ஆறுமுகன் என்பதை எவருமே மறந்துவிட முடியாது.

பெருந்தோட்டங்களில் வாழும் இளம் தலைமுறையினரின் ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்கிலும் அவர்களது சமூக அபிவிருத்தி கருதியும் ஆறுமுகன் தொண்டமானின் எண்ணத்தில் உதித்த பிரஜா சக்தி திட்டம் சிறப்பாக இன்று வரை அதன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

மலையகத்தில் எத்தனை கட்சிகள் முளைத்தாலும் எத்தகைய பிரயத்தனங்கள் செய்தாலும் மக்களின் அபிமானம் மிக்கத் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தான் என்பதை கடந்த 2010 ஆண்டு பொதுத்தேர்தல் பதிவு செய்திருக்கிறது.

இத்தேர்தலில் ஆளும் கட்சி மலையக மக்களின் செல்வாக்கை இழந்திருந்த தருணத்திலும் இக்கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் 60ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுகளில் அரசியல், தொழிற்சங்க பயணத்தை பல்வேறு வெற்றிகளுடன் அரசியலில் இன்னும் பலசாதனைச் சரிதங்களை தொடரவிருக்கும் நேரத்தில் எம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்ததை எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமே அமரரின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தலில் அவரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles