அமரர் மங்கள சமரவீரனின் 3ஆம் மாத நினைவஞ்சலி நிகழ்வுகள்….

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அன்னாரது 3 வது மாத நினைவஞ்சலியை மதக மங்கள நிகழ்வுடன் அனுசரிக்கவுள்ளனர்.

அன்னாரது அஸ்த்திக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்கு வசதியாக, 4 நாட்களுக்கு தனிப்பட்ட மற்றும் பொதுத் தருணங்களை அனுசரிப்பது உட்பட இரண்டு சந்தர்ப்பங்களில் (கொழும்பில் மற்றும் மாத்தறையில்) மத சடங்குகள் நடைபெற்று மாத்தறை மயானத்தில் அன்னாரது அஸ்தி நல்லடக்கம் செய்யப்படும்.

பயணத்தடை மற்றும் கடுமையான தொற்றுநோய் கட்டுப்பாடுகள் இருந்த நேரத்தில், ஆகஸ்ட் 24 அன்று மங்கள அவர்கள் எம்மை பிரிந்தார். அத்தருணத்தில் இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்கு அணுகல் மிகக்குறைவாகவே இருந்தது. மாறாக இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த இரங்கல் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஊடகங்களில் அவரது இழப்பின் மகத்தான சோகம் பிரதிபலித்தது.

உள்ளூர் மற்றும் உலகளாவிய அரசியல் மற்றும் பொதுப்பணி தலைவர்கள் முதல், மங்களவின் மூன்று தசாப்தகால அரசியல் வாழ்க்கை சகாக்கள் மற்றும் ஊழியர்கள் வரை என்று அவரை அறிந்தவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இலங்கைப் பொதுமக்களுக்கு – ஒரு ஒற்றை அரசியல்வாதி, ஒரு உண்மையான தாராளவாத தொலைநோக்குடைய, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் வெற்றியாளர், தவிரவும் ஒரு நியாயமான மற்றும் பச்சாதாபமுள்ள தேசப்பற்றாளர் இழக்கப்பட்டார்.

நவம்பர் 20 ஆம் திகதி இரவு 7 மணிக்கு “மாத்தறை போதிய”வில் பௌத்த அனுஷ்டானங்களின்படி முதலாவது பெளத்த போதனைகளுடன் மதக மங்கள நிகழ்வு ஆரம்பமாகும்.

23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு வல்பொல ராகுல பௌத்த நிலையத்தின் வணக்கத்திற்குரிய கல்கண்டே தேரரால் கொழும்பில் இரண்டாவதும் தனிப்பட்டதுமான பெளத்த போதனை நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வு ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனலில் பொதுமக்களுக்காக நேரலையில் ஒளிபரப்பப்படும்.

அதைத்தொடர்ந்து 24ம் தேதி புதன்கிழமை சமரவீர குடும்பத்தாரினால் தனிப்பட்ட அன்னதானம் வழங்கப்படும்.

நவம்பர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அமரர் மங்களவின் அஸ்தியானது கொழும்பு 8, பௌத்தத்தாலோக்க மாவத்தையில் உள்ள ஜயரத்ன இறுதிச்சடங்கு மண்டபத்தின் RESPECT மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மறுநாள், நவம்பர் 26 ஆம் திகதி காலை சமரவீரவின் அஸ்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் வரையறுக்கப்பட்ட ஊர்வலமாக மாத்தறை ஒலண்டா டச்சு சந்தை மண்டபத்திற்கு (நூபே) கொண்டு செல்லப்படும். இது மங்களவின் ஆலோசனைக்கிணங்க புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஒரு சமூக மையமாகும். இங்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பிரியமான அங்கத்தவர்களின் இறுதி தரிசனத்திற்காக வைக்கப்பட்டு அடுத்து நான்கு முதன்மை மதங்களிலிருந்துமான மதகுருக்களால் ஆசீர்வாத நிகழ்வு நடாத்தப்படும்.

பின்னர் மங்களவின் அஸ்தி, அன்னாருக்காக பணியாற்றியவர்களால் ஊர்வலமாக மாத்தறை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். கெமாவின் பையனும் மாத்தறை மண்ணினதும் மற்றும் இலங்கை தேசத்தினதும் அன்பு மகனுமான அன்னாரின் அஸ்தி, அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.

மங்களவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் அனைவரும் கோவிட் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், மங்களவை நினைவு கூறும் இணையத்தளமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான நல்லிணக்கம், சமாதானம் மற்றும் செழிப்பான தேசமாக ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமாக நடத்தப்படுதல் வலியுறுத்தப்படுவதுடன் மங்களவின் முற்போக்கானதொரு இலங்கைக்கான பார்வையை நிறைவேற்றுவதற்கு அனைத்து வயதினரையும் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எதிர்கால நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles