அமெரிக்க உயர்மட்ட குழு நாளை இலங்கை வருகை – பல தரப்புகளுடன் பேச்சு!

அமெரிக்க திறைசேரித் திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக் குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் 29 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து பல்வேறு சந்திப்புக்களில் பங்கேற்கவுள்ளனர்.

இத்தூதுக்குழுவில் ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் றொபர்ட் கப்ரொத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

Related Articles

Latest Articles