இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த மாதம் 4 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த 15 மாதங்கள் போர் தொடுத்து வந்தது. இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதனிடையே அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக காசாவில் கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
குறித்த போர் நிறுத்தத்தை தொடர வேண்டுமென அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஹமாசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமருக்கு, ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். குறித்த அழைப்பை ஏற்றே அவர் வாஷிங்டன் செல்கின்றார் எனத் தெரியவருகின்றது.