” அமெரிக்கா நரகத்திற்கு போய்கொண்டிருக்கின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
” ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து அச்சமின்றி நாட்டை பாதுகாப்பது தான்” அமெரிக்கா நகரத்திற்கு போகிறது எனக்கு பெரிய ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட, இப்படி நடந்து இருக்க கூடாது என கூறுகின்றனர்.
தான் இப்போது எதிர்கொள்வது “தேர்தல் குறுக்கீடு”,வரவிருக்கும் 2024 தேர்தலில் குறுக்கீடுகளை ஏற்படுத்தவே இந்த பொய் வழக்குகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது, இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
