அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை! துப்பாக்கிதாரி வெறியாட்டம்!!

அமெரிக்கா, லூயிஸ்டனில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்களின் பிரகாரம், குறித்த மர்ம நபர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்தநபர் சம்பவத்திற்கு பின்னர் தப்பியோடியதாகவும் தெரிகிறது. அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மர்ம நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அடையாளம் காட்டும்படி பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நகரின் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் இதுபோன்ற 647 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles