” தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பாரென” -அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 2022 ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” அமைச்சரவை மாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. மாற்றம் பற்றி எமக்கு உறுதியாக கூறமுடியாது. அரசமைப்பின் பிரகாரம் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் நினைத்தால் மறுசீரமைப்பு செய்யலாம்.”- என்றார்.










