விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், 6 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையில்லை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் வினவிய போது, விரைவில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய கட்சியின் சிரேஷ்டர்களின் பட்டியலை இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் தமது கட்சி சமர்ப்பித்ததாகவும், ஆனால் அதன் பின்னர் நியமனங்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










