2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறாதெனவும், அரச நிர்வாகக் கட்டமைப்பில் முக்கியமான சில மாற்றங்கள் வரவுள்ளதெனவும் அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கான ஏற்பாடுகளும் அரச மேல் மட்டத்தில் இடம்பெற்றுவந்தது.
எனினும், அமைச்சரவை மாற்றத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், அம் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.
அமைச்சரவையை மறுசீரமைப்பதைவிடவும், அரச நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைப்பதே சிறந்ததென சிரேஷ்ட உறுப்பினர்களால் பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சுகளின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள், திணைக்கள பிரதானிகள் என முக்கிய பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளன.
