முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற புலனாய்வுப் பிரிவினரால் சற்று நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமைச்சரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்திய பின்னரே கைது இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இன்று சிஐடி வந்திருந்தார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.










