‘அமைச்சர் டக்ளஸ் போராட்டக்களம் வந்ததால் பெரும் பதற்றம்’

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்த போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்து அங்க பதற்ற நிலை உருவானது.

பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles