“ அரசுமீது மக்கள் கடும் சீீற்றத்தில் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்கு இனிவரும் நாட்களில் வீதிகளில் செல்லமுடியாத நிலைமைகூட ஏற்படும்.” -என்று அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் விவசாய நிலம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சீற்றத்துடன் வீதியில் இறங்கி போராடுவருகின்றனர். மறுபுறத்தில் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதேபோல பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை. அவ்வாறு நின்றாலும் பொருட்கள் இல்லை. இவ்வாறு நாடு படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசுமீது மக்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். அமைச்சர்களுக்கு எதிர்காலத்தில் வீதிகளில் இறங்கி செல்லமுடியாத நிலை ஏற்படும். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புத்தாண்டும் வந்துள்ளது. வரிசை, நெருக்கடி, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றையே அரசு மக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.” – என்றார்.
அதேவேளை, தற்போதைய நெருக்கடி நிலைமைகூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.










