” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி அரசில் எந்த கட்சி இணைந்தாலும், மலையக மக்கள் முன்னணி இணையவேக்கூடாது.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் கதிர்காமத்தம்பி சுரேன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பான அவரின் ‘பேஸ்புக்’ பதிவு வருமாறு,
” யார் போனாலும் மலையக மக்கள் முன்னணி போக கூடாது, அது தலைவர் சந்திரசேகரன் அரசியல் அல்ல, எனவே, தலைவர் ராதா செல்லமாட்டார் என உறுதியாக நம்புகின்றோம்.
அன்று மக்கள் பக்கம் நின்றே முடிவு எனக் கூறப்பட்டது, இன்றோ ரணில் பக்கம் என வலியுறுத்தப்படுகின்றது. இது எந்தளவு சாத்தியபடும் என தெரியவில்லை.
அப்போ முசரப் இப்போ பூட்டோ காமடி போல் உள்ளது இது.
அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பான கூட்டம் இன்று (நேற்று) எமது முன்மொழிவு.
நாட்டைக் கட்டிய்யெழுப்பு வேண்டிய தேவை கடப்பாடு அனைவருக்கும் உண்டு. அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க ஒரு கடப்பாடு நமக்கு இருந்தது.
ஆனால் இப்போ அனைத்தையும் முடித்து கொண்டு அரியணை ஏரியுள்ள ரணில் என்ன செய்கிறார் என்பதனை பார்த்து நமக்காக என்ன மாதிரியான தீர்வினை தருகின்றார் என்பதைப்பொருத்துத்தான் ஆளும் அரசில் இணைய வேண்டும் .
மாறாக மொட்டு கட்சியை பயமுறுத்துவதற்கும் சர்வதேசம் ஜெனிவா போன்றவற்றை ஏமாற்றுவதற்கும் தமிழ்கட்சிகளை வளைத்து போடும் இன்றைய சூழலில், அரிசில் இணைவது ரணிலுடன் கை கோர்ப்பது தேவையற்றது.
நாம் கொள்கையளவில் வெளியில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதும் பிழைகளை சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்லதை செய்ய கையுயர்த்தவும் தயங்க கூடாது.
காரணம் இன்னும் சிங்கள கட்சிகளுக்கிடையேயான சரியான ஒரு புரிந்துணர்வுடன் கூடிய சர்வகட்சி அரசு ஏற்படும் சாத்தியம் இல்லை
நாம் எதற்காகவும் முன்னுக்கு போய் ஆதரவு தரவேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை!!!
எமது கோரிக்கைகளை முன் வைப்போம்! என்ன பதில் என பார்ப்போம்!
பதவியேற்றதன் பின்னர் ரணில் முழுமையாக மாறிப்போயிருக்கின்றார் ராணுவத்தை தனது கைகளுக்குள் வளைத்து போட்டிருக்கின்றார் !
இளைஞர்களை தாக்கி போராட்ட களத்தை அழித்திருக்கின்றார்!அதனை அவர் பிரதமராக இருந்த போது ஏன் செய்யவில்லை?
மலையகம் சார்ந்து இ.தொ.கா அரசுக்குள் இருக்கின்றது தானே பிறகு நாமும் எதற்கு நாம் வெளியிலிருந்து குரல் கொடுப்பதுதான் இப்போதைக்கு சரி மாறாக நாமும் அரசுக்குள் போவது இன்றைய நிலையில் தேவையற்றது.
வெறும் அமைச்சு பதவிக்காக கொள்கையை விட்டு பயணிப்பது மிகக்கேவலமான செயலாகும்.
ரணில் எதையோ சாதிக்க கூடியவர் அதற்காக அனைவரினது ஆதரவையும் ஒருவருக்கு வழங்கி அவர்எதிர்பார்க்கும் அசுர பலத்தை கொடுத்து அவரை இலங்கையின் நவீன ராவணனாக மாற்ற இப்போதைக்கு தமிழ்க் கட்சிகள் இணங்க கூடாது.
நாம் வழுவாக பேரம் பேசுவோம் மக்களின் தேவைகளை திட்டமிட்டு கடுமையான பேரம் பேசுதலில் இறங்கி சரியென்றால் இணையுங்கள் இல்லாவிட்டால் விட்டுவிடுவோம்.
மாறாக அவரை எதிர்த்து விட்டு இன்று போய் இணைவது கொள்கையளவில் கூட்டணிக்கு அழகில்லை !
அது மக்கள் மத்தியில் அமைச்சு என்கிற எலும்பு துண்டுக்கு வாலாட்டிய கதையாய் போய் சேரும்!
அன்று அரசாங்கத்தில் இணைய சொன்ன நான் இன்று இணையக்கூடாது என்கின்றேன்!
அன்று ராஜபக்சக்களை தோற்கடித்து ரணில் போன்ற நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய தேவையிருந்தது.
இப்போது அவருக்கு அது கிடைத்து விட்டது இனி செய்வதை அவதானிப்போம்
அன்று ஆதரிக்காமல் இன்று போய் அமைச்சு பதவி எடுப்பது அழகா??ஆகவே மலையக மக்கள் முன்னணி ஒரு போதும் அரசாங்கத்துடன் இணையக்கூடாது.தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணையக்கூடாது!அதுவே தர்மம்! அழகு!
பிழைகளை சுட்டிக்காட்டுவோம் , நல்லவற்றை ஆதரிப்போம் வெளியில் இருந்து மாறாக முட்டு கொடுத்தல் தேவையில்லை !
ஜெனிவா அழுத்தங்கள் விரைவில் இலங்கையின் மேல் பாயும் அதனை காட்டிக்கொடுக்கும் சக தமிழனாக இருக்ககூடாது!
யார் போனாலும் மலையக மக்கள் முன்னணி போக கூடாது அது சந்திரசேகரனின் அரசியல் அல்ல…
தலைவர் ராதா செய்ய மாட்டார் என நம்புகின்றேன்!நாம் மக்களுக்காக சிந்திக்கும் மலையக மக்கள் முன்ணனியென்றால்
கொள்கையுடன் பயணிப்போம்! ஜீவனுக்கு அமைச்சுபதவி கிடைப்பது நமகென்ன கிடைத்தால் கிடைக்கட்டும் , அது வலிப்பவர் வேண்டுமானால் போகட்டும் அப்படி கூட்டணி செய்யாது எனவும் நம்புகின்றேன்!
” கழுத்தில் துண்டு என்பதை தாண்டி அந்த துண்டின் கொள்கை முக்கியம்” ” – என்றார்.










