அம்பலாங்கொடை நகரில் நேற்றிரவு(24) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அம்பலாங்கொடை – ரன்தொம்பே பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










