அம்மா, அப்பாவை பார்த்துக்கொள்ள எங்களுக்கு தெரியும்!

” எமது பெற்றோரை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும். நாம் அடுத்தவர்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. அரசியல் பழிவாங்கல் வேட்டைமூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கிராம மட்டத்திலிருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் எமது அரசியல் பிரச்சார பணி ஆரம்பமாகும். கிராம மட்டத்திலான எமது ஆதரவாளர்களுடன் முதலில் சந்தித்து நடத்தப்படும். அதன்பின்னர் அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.

முறைமை மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய பாதையிலேயே பயணிக்க தொடங்கியுள்ளனர். அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். அதன்மூலம் எமது அரசியல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்கு முகங்கொடுத்து நாம் பழகிவிட்டோம். எம்மை சிறையில் அடைத்தாலும் கட்சியின் பணி தொடரும்.

எமது அம்மா, அப்பாவை எமக்கு பார்த்துக்கொள்ள முடியும். நாம் அயல்வீட்டார்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. ஆனால் எம்மிடம் பாதுகாப்பு படை இல்லை. எனவே, முன்னாள் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பை அரசாங்கம்தான் வழங்க வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் உள்ள ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். அதனை மீறும் வகையில் செயல்பட முடியாது. எமக்கு எழுத்துமூலம் அறிவித்தால் வீட்டில் இருந்து வெளியேற முடியும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles