அரச ஊழியர் வெட்டிப் படுகொலை – பொலன்னறுவையில் பயங்கரம்

பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதம நிர்வாக உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles